Google நிறுவனம் தனது  AIY Project ஐ  கடந்த வருடம் ,அதாவது 2017 ஆம் ஆண்டு வெளியிட ஆரம்பித்தது ,அதன் படி இது வரை இரண்டு AIY Kit கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வகையான project கள் வடிவமைப்பாளர்களுக்கும் புதிய project களை உருவாக்குபவர்களுக்கும் மிகப் பெரும் பலமாய்அமைந்துள்ளது.அவர்கள் தங்களது project களில் (AI-Artificial Intelligence) செயற்கை அறிவாற்றலை பயன்படுத்த இவ் AIY Kit கள் உதவியாக இருந்து வருகின்றன.

இவ் AIY Kit கள் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை குறுகிய காலத்தில் பெற்றது.ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பாரிய பயன்பாட்டை  தரக் கூடிய ஒன்றாக Google இன் இந்த AIY Kit களை இனம் கண்டனர்.அனைவர் மத்தியிலும் வரவேற்பு  பெற்றதை அவதானித்த Google நிறுவனமானது AIY Kit களை மேலும் வலுப்படுத்தி புதிய பல update களை சேர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்ற தீர்மானித்தது.இவ் AIY Kit இன் பயன்பாடு எந்த அளவு என்றால் இதனை பயன்படுத்தி இதுவரை மாணவர்கள் காணாத project களை உருவாக்க முடியும்.

அந்த வகையில் இவ்வருடம் update கள் உள்வாங்கப்பட்ட இரண்டு AIY Kit களை Google வெளியிட்டுள்ளது.அவை AIY Voice Kit மற்றும் AIY Vision Kit.

AIY Voice Kit

இந்த Voice Kit இனை பயன்படுத்தி குரல் கட்டுப்பாட்டினால்  (Voice Command) செயற்படக் கூடிய speaker ஒன்றை நம்மால் உருவாக்க முடியும்.

 

Voice Kit ஆனது Google Assistant உடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி நமது command களுக்கு பதிலளிக்க கூடிய ஓரி intelligent speaker ஐ உருவாக்கலாம்.மேலும் இவ் Voice Kit ஐ பயன்படுத்தி Artificial Intelligence உடன் சேர்ந்த குரல் கட்டுப்பாட்டை பயன்படுத்தும் smart project ஒன்றை இலகுவாக வடிவமைக்க முடியும்.உதாரணமாக ,voice command மூலம் செயற்படும் robot கள், பாவனையாளர்களின்  பாடல் தெரிவுகள் , game ,இன்னும் பல.

இந்த Voice Kit இன் பாகங்களை எவ்வாறு இணைப்பது மற்றும் எவ்வாறு பயன்படுதுவது போன்ற அறிவுறுத்தல்கள் இப் புதிய Kit களில் இணைக்கப்பட்டுள்ளன.

AIY Vision Kit

இது ஒரு சுவாரஸ்யமான Kit.AIY Vision Kit ஐ பயன்படுத்தி மனிதர்கள் மற்றும் பொருட்களை அடையாளம் காணக்கூடிய camera ஒன்றை நம்மால் வடிவமைக்க முடியும்.

இதில் அமையப்பெற்றுள்ள camera வானது மனிதர்களின் முக expression களை (Emotions) அடையலாம் காணக்கூடியது.அது மட்டுமன்றி முகத்தின் நகர்விற்கு ஏற்ப தானும் அசைந்து location ஐ display இல் தெரிவுபடுத்தும்.அதாவது Face Tracker ஆக செயற்படும்.

 

Hardware and Software

இரண்டு Kit களும் வசதிக்காக Raspberry Pi Zero WH உடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒரு USB connector மற்றும் SD Card போன்றவை Kit களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Update கள் சேர்க்கப்பட்ட AIY Kit v1.1 ஆனது Raspberry Pi camera v2 இனை தன்வசம் கொண்டுள்ளது.எனவே பாவனையாளர்கள் Software Image ஐ இனிமேல் download செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வனைத்துடனும் சேர்த்து Google ஆனது AIY Companion App ஒன்றை வெளியிட்டுள்ளது.இவ் app ஐ பயன்படுத்தி wireless தொடர்பாடலை Kit களுடன் ஏற்படுத்த முடியும்.

மாற்று  வழியாக monitor,keyboard மற்றும் mouse களை பயன்படுத்தியும் தொடர்பை ஏற்படுத்த முடியும்.புதிய AIY Voice Kit மற்றும் Vision Kit களை மிக விரைவில் நம் நாட்டு சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும்.

Google இன் இவ் புர்ட்சி கரமான AIY Kit களை பயன்படுத்தி  உங்கள் project களை  மேலும் வலுவாக்க  ஓர் சந்தர்பம்.