சில மாதங்கள் முன்பு நம் அனைவரையும் மாயஉயிரினங்களை தேடி தெருக்களில் அலைய விட்ட Pokémon GO ஆகட்டும், இனி வரவிருக்கும் ஏனைய Augmented Reality(புனை மெய்யாக்கம்) games ஆகட்டும், அனைத்தையும் அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல கூடிய ஒரு செய்தியை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, Google Maps APIகளை அனைத்து AR gamesகளிலும் பயன்படுத்தமுடியும். இச்செய்தி எல்லா AR gamesகளுக்கும் கட்டுக்கடங்கா வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், game developers இனிமேல் அவர்களுடைய gamesகளினுள் அடங்கியுள்ள சூழல் மற்றும் கட்டமைப்புக்களை வடிவைமைக்கும் நேரத்தை, gameகளை இன்னும் மெருகேற்ற பயன்படுத்தலாம். காரணம், ஒவ்வொரு AR gameகளும் அந்த gameஇனுள் உள்ள சூழலுடன் தொடர்புகொண்டு முன்னேறும் முறையை சார்ந்தவை. அந்த வகையில், Google Maps APIகள், AR gamesஇன் சூழலை வடிவமைக்கும் வேலையை செவ்வனே நிறைவேற்றக் கூடியது. இது கேம்களை உருவாக்கும் பணியை இன்னும் இலகுவாகியுள்ளது. அத்தோடு கூகிள் மாப்ஸ் APIகளில் உள்ள அதிகப்படியான இடஅமைவுத்தரவுகளும், நிலையான நிகழ்நிலைப்படுத்தல்களும்(updates),  game developers அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Google Maps இன் மென்பொருள் மேலாளர் Jacobyஇன் கூற்றுப்படி,

Google Maps API மூலம் நாம் தெரிவுசெய்யும் தனித்தன்மை கொண்ட மெய்யுலக இட அமைவுகளில், உலகின் எந்த பாகத்திலுமுள்ள ஒருவரால் விளையாட்டில் பங்குகொள்ளமுடியும்.

அதுமட்டுமன்றி, இதன் இன்னொரு சிறப்பம்சமான Maps Unity SDKயின் செயல்பாடானது எந்த மெய்யுலக கட்டமைப்பையும்( பூங்காக்கள், தெருக்கள், கட்டடங்கள்) Unityஇல் GameObjects ஆக தானாகவே மாற்றியமைக்கும்.இதன் காரணமாக developers இழையமைப்பில்(texturing) மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானதாகஇருக்கும். இதனைப் பயன்படுத்த எவரும் Google Mapsஇல் வல்லுனராக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அனைத்தையும் The Maps Unity SDK நிறைவேற்றும் எனவும் கூறப்படுகிறது. மெய்யுலக கட்டமைப்புகளை எமக்கு விருப்பமான முறையில் இதன் மூலம் வழக்கப்படுத்தி gameகளுக்கு பொருத்தமான முறையில் வடிவமைத்தும் கொள்ளலாம். உதாரணமாக ATMகளை புதையல்காகவோ, அல்லது சந்தைகளை உணவு இருப்பிடமாகவோ எம் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

வெளிவர இருக்கும் Ghostbustors World gameஆனது கூகிள் மாப்ஸ் APIஇனையே பயன்படுத்தியுள்ளது. அது குறித்து, அந்த gameஇனை வடிவமைத்த 4:33 creative Lab இன் நிறுவனர் கூறியுள்ளதாவது, “ பயனர்கள் விரும்பும் வகையிலான இட அமைவுகளை கண்டுகொண்டு, அவற்றில் அவர்களை திருப்தி செய்யும்  வண்ணம் மெய்யுலக இடைத்தொடர்புகளை( interaction ) உருவாக்குவது சவாலான ஒரு விடயம். Googleஇன் இடஅமைவுத் தரவினை அடிப்படையாகக் கொண்டு( location data ), உலகம்முழுதும் உள்ள பயனர்கள் Ghostbusters World வழியாக மெய்நிகர் யதார்த்தத்தை( Virtual Reality) உணர முடியும்”.

Ghostbusters World, The Walking Dead: Our World மற்றும் Jurassic World Alive ஆகியன இதே தொழினுட்பதினை பயன்படுத்தி வெளிவரவுள்ள games ஆகும். இவற்றினை மக்கள் ஏற்றுகொள்ளும் விதத்தினைப் பொறுத்து gamesகளின் எதிர்காலம் மாறக்கூடும். காத்திருப்போம்.